ஜன்னலோர பயணம் !

ஓடி  போய்  பேருந்தில்  ஏறி  கொண்டேன். கண்கள்  அலைபாய்கிறது. ஆஹா ! கண்டேன்  சீதையை  என  கிடைத்த   இருக்கையில்  அமர்ந்து  கொண்டேன் . நெரிசல்  இல்லை. அடுத்த  நிறுத்தத்தில்  என்  அருகே  அமர்ந்திருந்த   அம்மாள்  இறங்கிக்கொள்ள , ஆஹா  கிடைத்தது  ஜன்னலோரம்  எனக்கு. நான்கு  மணி  நேரம்  அல்லவா  பயணம் !

காட்சிகள்  விரிய  தொடங்கின ! முதலில்  பார்வைக்கு  வந்தவர்  தள்ளாத   வயதிலும்  ஓடியாடி  நிலகடலை  விற்றுகொண்டிருந்த  தாத்தா. பார்த்ததும்  தோன்றியது   உழைக்காமல்  படுத்து  உண்ணும்  சோம்பேறிகளுக்கு  இவர்  ஒரு  பாடம் !

பேருந்து  நிலையத்தை  விட்டு   நகர  தொடங்கியது  பேருந்து. அட, அவனும்  அவளும்  தோழர்களோ  காதலர்களோ! அவன்  காதில்  headset ஐ  மாட்டி  பாட்டு கேட்கிறான். அவளோ  தான்  பேசுவதை  தான்  கேட்கிறான்  என்றெண்ணி  சொல்லாத   கதை  அனைத்தையும்  ஒவ்வொன்றாய்  சொல்லுகிறாள். மனதுக்குள்  சிரித்துக்கொண்டேன் !

ஒரு  சிறுவன்  எதோ  ஓடும்  பேருந்தை  நிறுத்த  வருவது  போல  வேகமாக  ஓடி  வருகிறானே ! அட , அவனது  அம்மா  போலும் பின்னாடி . கையில்  குச்சியோடு! அட  ராமா  என்று  அலுத்துகொண்டேன்  !

என்னமா  இது  துப்பட்டாவ  இப்டியா  பார்க்க   விடுவாங்க ? வண்டியை   ஓடிய  கணவனோடு  பேசியபடியே  துப்பட்டாவ   காற்றில்  விட்டிருந்த  பெண்ணை  பார்த்து  கோபமே  மிஞ்சியது !

ஐயோ ! பயந்தே  விட்டேன் ! இப்படியா  வருவான்  லாரி   காரன் ! கரணம்  தப்பினால்  மரணம்   என்ற  சொல்லின்  அர்த்தம்  விளங்கியது பார்த்து  வாகனம்  ஒட்டுங்கள்  பெரியோரே !

இப்போது  பேருந்து  கிராம  பாங்கான  வழியாய்  போய் கொண்டிருந்தது. பச்சை  பசேலென்ற  வெளிகளும்  , சில்லென்ற  எனது  மாமாவின்  கிராமத்தையே  நினைவூட்டியது  . சற்று  நேரம்  அதை  ரசித்த  நான்  பின்பு  சில  நேரம்   ஒரு  ஆங்கில  நாவலில்     மூழ்கினேன் .

எனது  நிறுத்தம்  வந்து  விட்டது . இறங்கி  போனேன்  இன்னொரு  ஜனலோர  இருகைகாரியின்   காட்சிபொருளாய் !

பயணங்கள்  முடிவதில்லை !

கருத்துகள்