இடுகைகள்

பிப்ரவரி, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெண்ணிவள் போர் குணம் படைத்தவள் !

படம்
இவள் செய்த பிழையென்று சொல்வதா ?  பிறர் செய்த சதியென்று  சொல்வதா? இத்திரு நாட்டில் உதித்து விட்டாள் ! போர் குணம் படைத்த இவள் ! பிறந்த நாளன்று முகம் கூட பார்க்காமல்  தூக்கி வீசிய அப்பன்  கண் விழித்து  தன் உயிர் காணாது  பிதற்றிய அவள் அன்னை  இவள் செய்த பிழையென்று சொல்வதா ?  பிறர் செய்த சதியென்று  சொல்வதா? இத்திரு நாட்டில் உதித்து விட்டாள் ! போர் குணம் படைத்த இவள் ! இதழ் விரிக்கவும் இல்லை  இந்த இளம் பூ மொட்டு ! கண்ணடிகளால் கருகி தான் விடுவாளோ ? வீரி இவள் சாட்டை சொடுக்கி  விரட்டி விட்டாள் அவர்களது   கண் பிடுங்கி ! இவள் செய்த பிழையென்று சொல்வதா ?  பிறர் செய்த சதியென்று  சொல்வதா? இத்திரு நாட்டில் உதித்து விட்டாள் ! போர் குணம் படைத்த இவள் ! தன் கையே தனக்குதவியை தாண்டி  பிறருக்கும் உதவி என்பாள் இவள் ! பெருக்கெடுக்கும் பொறாமை ! பெண்ணிவள் எனக்கு மேலா ? நசுக்கு அவளை  நச்சுப் பாம்புகள் சுற்றி வளைக்கும்! வெட்டி வீசி விரைந்து செல்வா...

காதல் - கருப்பா, சிவப்பா?

படம்
காதலா? அது எப்படி இருக்கும் ? கருப்பா ? சிவப்பா ? ஏதோ புனிதமானதாமே ? வயிற்றுக்கும் தொண்டைக்குமாய் உருளை உருளுமாமே ? கனவுக்குள் மிதக்க வைக்குமாமே ? காணும் கல்லிளெல்லாம் கலை உருகுமாமே? கேட்கும் ஒலியெல்லாம் இசையாய் ஜொலிக்குமாமே? பாடல்கள் ஆக்கப்பட்டதே  தனக்காய்த் தோன்றுமாமே ? அப்பாவின் திட்டுகள் தாலாட்டுகள் ஆகுமாமே? என்னமோ, என்னைத் தூக்கிக் கொஞ்சும் போதெல்லாம் இந்த அக்காள் பேசிச்சொல்கிறாள்! எனக்கு ஒன்றும் புலப்படுவதில்லை!

நண்பன்டா !

படம்
தோழர்கள் கட்சிக்குள் அடிமட்ட தொண்டனாய் நுழைந்து ரகசியங்கள் முதன் முதலாய் உன்னிடம் பிரசுரிக்க படும்போது நீ "நண்பன்டா " ஆகிறாய் !!