கூடாது கூடாது என்று சொன்னால்தான் நினைப்பேன் நினைப்பேன் என்று சொல்லாமல் சொல்லி அடம்பிடிக்குது ! விட்டு விடு விட்டு விடு என்று பலமுறை கூறி விட்டேன் கேட்டுகொண்டதாய் தெரியவில்லை ! திரும்பி திரும்பி பார்க்காதே ஒன்றும் வேலைக்காகாது என்றேன் கண்கள் முன் நோக்கவில்லை ! சரி போனால் போகிறது இந்த ஒரு முறை மட்டும் என்றபடி 10 ரூபாயை எடுத்து கொடுத்து வங்கிக்கோ ஐஸ் கிரீம் என்றதும் மனம் நான் சொன்னதை கேட்டு நடந்ததாய் தோன்றியது !!