நான் அவனை ரசித்து கொண்டிருந்தேன்!
நான் அவனை ரசித்து கொண்டிருந்தேன்! கண்களை உருட்டி பார்க்கிறான்! கீழே குனிந்து மர்மப்புன்னகை புரிகிறான்! திடீரென கண்ணடிக்கிறான் ! எழுந்து துள்ளி குதித்து பின் மீண்டும் அமர்கிறான் ! வாயை குவித்து ஆச்சரிய பாவனை செய்கிறான்! கையை நீட்டி நீட்டி ஆனந்த சிரிப்பை உதிர்கிறான் ! கண்களை விரித்து உலகம் அனைத்தையும் உள்ளே அழைக்கிறான்! கார்ட்டூன் நெட்வொர்க்-இல் டாம் அண்ட் ஜெர்ரி பார்த்து கொண்டிருந்த பக்கத்துக்கு வீட்டு சிறுவன் !