இடுகைகள்

Lunch Idea 1: What Goes Well With Quinoa?

படம்
Quinoa Lunch Idea - 1  Curd Quinoa With all the health talk going around these days, complex carbs, lot of fiber and what not, quinoa is being seen in many recommendations of healthy food habit. So, I am going to be sharing a lunch idea with the quinoa as the main dish. As you can see in the picture, the menu is made of: Quinoa, Lady's Finger Curry, Egg Fry, Curd Quinoa. How to cook quinoa? Follow the recipe in the quinoa box. In fact, its very easy and fast to cook. Since quinoa is a little bland and more chewy than rice, I made this Lady's Finger Curry using the recipe from Padhu's Kitchen , except I reduced the cumin powder, as I do not like the intense flavor it brings out. With the tomato & masala cooked together, this curry will go well with quinoa. To contrast the masala & the tanginess of the lady's finger curry, prepared the scrambled egg ( basic, but used a little bit of tomato gravy from the lady';s finger curry with pepper and s...

Breakfast: Ven Pongal

படம்
Breakfast Idea: Ven Pongal + Coconut Chutney Who does not like a delicious ven pongal, on a morning, followed by an aromatic filter coffee.. Here I made Ven Pongal in pressure cooker, sided it with Coconut chutney, unlike the usual sambhar way. Believe me, it will sweep you off your feet.  For ven pongal, followed this recipe to the T:  Ven Pongal Recipe To make coconut chutney, add the below ingredients in a mixie jar and grind, grind, grind..  Coconut, Roasted Bengal Gram ( பொட்டுக்கடலை ), Some Ginger, Few Garlic pods , Salt, Curry Leaves, Fennel Seeds.

எங்கள் வீட்டு பூனைக்குட்டி

எங்கிருந்தோ வந்தாள் அவள்.. நன்றாக நினைவில் உள்ளது. அவளாகவே எங்கள் வீட்டுக்கு வந்தாள். நாங்கள் அவளை துரத்தி விடவில்லை. தயிர் சாதமும் பாலும் தந்தோம். பின், எங்களுள் ஒருவளாகி விட்டாள். என்னோடும், என் தங்கையோடும் சேர்ந்து தோசை கூட சாப்பிட ஆரம்பித்து விட்டிருந்தாள். இவள் இனத்தவர் தோசை கூட சாப்பிடுவார்களா என்ற கேள்வி இன்னும் என்னுள் உள்ளது. நானோ என் தங்கையோ இருந்தால் போதும், எங்கு போனாலும் எங்கள் காலுக்குள்ளே தான் சுற்றுவாள். உட்காந்து இருக்கையில் பக்கத்திலேயே இருப்பாள். அவள் தலையால் கையைத் தேய்த்துத் தேய்த்து தடவி விட சொல்வாள்.  அவள் தூங்குவதைப் பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும். மிக அழகாகத்  தூங்குவாள் அவள். வாய்ப்பு கிடைத்தால் எனது அல்லது என் தங்கையின் மடியே மெத்தையாக இருக்கும். பூனைக்  குட்டி அவ்வளவு பாசமாக இருக்க முடியும் என்பதை நிரூபணம் செய்தவள் .. ஒரு நாள், எதோ காரணத்தால் மறைந்து போனாள்.. எங்கள் கண்களில் தென்படாமல்..  She could lighten the mood, however troubled we were .. Such a great pal.. She will be remembered forever..

சாம்பல் உணர்வுகள்

குட்டிப் பாப்பா! புடிக்கலையா அழுதுடும் புடிச்சதுனா சிரிச்சிரும்! கருப்பு வெள்ளை தான் தெரிஞ்ச உணர்வுகளின் வண்ணம்.. நான் நினைத்துப் பார்க்கிறேன்! ரொம்ப புடிக்கும் கொஞ்சம் புடிக்கும் புடிக்காது, ஆனா பரவாயில்லை புடிக்காது சுத்தமா புடிக்காது தாங்க முடியாது அழுகை முட்டும் பல சாம்பல் நிற உணர்வுகள் தான் மிஞ்சி இருக்கின்றன! கருப்பும் வெள்ளையும் காணாமல் போனது எப்போதோ?

Solo Travel

I did not realize the traffic! I took an auto, to office today. I did not realize the traffic As my thoughts were traveling faster than the auto Back and forth Between one action to the other, to the other Wondering, where it all went wrong?! Will they find the answer? Before I reach my destination!

பச்சாதாமமும் பயமும்!

காதில் தலையணியோடு பாடல்கள் கேட்டுக்கொண்டே, நடப்பது எனக்கு பிடிக்கும். அலுவலகம் முடிந்து திரும்புகையில், ஒரு பூங்கா அருகில் இறங்கி, அங்கிருந்து வீட்டுக்கு நடந்து செல்வதுண்டு. இன்றும் அப்படித்தான்! பாட்டுக் கேட்டுக்கொண்டும் பாடிக்கொண்டும்( வேறு யாரும் கேட்க முடியாதல்லவா, தெருவில் போகும் வண்டி சத்தத்தில்!) போய் கொண்டிருக்கிறேன். ரோடு ஓரம் எதாவது கடை போட்டு வியாபாரம் பண்ணும் மக்கள் இங்கேயும் உண்டு. வெயில் காலம் என்பதால் எலுமிச்சைச் சாறு, பழங்கள், குளிர் பானங்கள்  இருக்கும். இன்று எதோ எடை பார்க்கும் இயந்திரத்தை வைத்துக்கொண்டு, இலவசமாக எடை பார்க்கலாம், எடை இறக்க உதவி கிடைக்கும் என்றெல்லாம் போட்டு ஒரு கடை வைத்திருந்தார்கள்.  எதோ உடற்பயிற்சி நிலையம், விளம்பரத்துக்காக செய்வார்கள் போல. கையேடு ஒன்று வைத்து, எத்தனை பேர் என்று கணக்கெல்லாம் வைத்து கொண்டிருந்தான். நமக்கு இங்க எடை பார்த்தா  மட்டும் என்ன, ஏற்றிக் காட்டீரவா போகிறது என்று உள்ளுக்குள் எண்ணியவாறே, நான் பாட்டுக்கு, அவனைத் கண்டு கொள்ளாமல் போயிரலாம் என்று பாட்டில் கவனத்தை செலுத்தியவாரே வீடு போய் சேர்ந்தேன். அடுத்த நாள் ம...

வாழ்ந்து முடிப்போம்...

ஒரு குறிப்பிட்ட பிராயம் வரை , இறப்பும் இறுதி சடங்குகளும் பெரிதாய் நம்மை பாதிப்பதில்லை. நம் குடும்பத்தில், சுற்றத்தில் அது நிகழும் வரையிலும் அதன் துன்பம் நாம் அறிவதில்லை. ஆம் ! இது துன்பம் தரும் விஷயம்  தான். வயதாகி, அனைத்தும் அனுபவித்து படக்கெனப் பறந்து போகும் தாத்தா பாட்டியின் பிரிவு ஒரு வகையானது. அதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும். சோகம் ஒரு புறம் இருக்கும் தான் ! வாழ்ந்து முடித்த பூக்களல்லவா அவர்கள். திடீரென எதிர்பார்க்காத நாளில், எதிர்பார்க்காத தொலைபேசி அழைப்பில், எதிர்பார்க்காத இழப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது. இது இறப்பையும் இறுதி சடங்குகளையும் பார்த்து பயப்பட வைப்பது. ஏன் , எதற்கு இது நடந்தது .. அப்படி எப்படி நடக்கலாம். இன்னும் நாட்கள் பல உள்ளனவே பார்த்து களிக்க, என பல பதில் கிடைக்கப்போகாத கேள்விகளை எழுப்புவது இது. நினைக்கும் போதெல்லாம் பதைபதைக்க வைப்பது. இத்தகைய இறப்பு இல்லாமல் இருப்பது மிக நல்லது. எது எப்படியாயினும் வாழ்ந்து முடிப்போம் நாம்.