பச்சாதாமமும் பயமும்!
காதில் தலையணியோடு பாடல்கள் கேட்டுக்கொண்டே, நடப்பது எனக்கு பிடிக்கும். அலுவலகம் முடிந்து திரும்புகையில், ஒரு பூங்கா அருகில் இறங்கி, அங்கிருந்து வீட்டுக்கு நடந்து செல்வதுண்டு.
இன்றும் அப்படித்தான்! பாட்டுக் கேட்டுக்கொண்டும் பாடிக்கொண்டும்( வேறு யாரும் கேட்க முடியாதல்லவா, தெருவில் போகும் வண்டி சத்தத்தில்!) போய் கொண்டிருக்கிறேன். ரோடு ஓரம் எதாவது கடை போட்டு வியாபாரம் பண்ணும் மக்கள் இங்கேயும் உண்டு. வெயில் காலம் என்பதால் எலுமிச்சைச் சாறு, பழங்கள், குளிர் பானங்கள் இருக்கும். இன்று எதோ எடை பார்க்கும் இயந்திரத்தை வைத்துக்கொண்டு, இலவசமாக எடை பார்க்கலாம், எடை இறக்க உதவி கிடைக்கும் என்றெல்லாம் போட்டு ஒரு கடை வைத்திருந்தார்கள். எதோ உடற்பயிற்சி நிலையம், விளம்பரத்துக்காக செய்வார்கள் போல. கையேடு ஒன்று வைத்து, எத்தனை பேர் என்று கணக்கெல்லாம் வைத்து கொண்டிருந்தான்.
நமக்கு இங்க எடை பார்த்தா மட்டும் என்ன, ஏற்றிக் காட்டீரவா போகிறது என்று உள்ளுக்குள் எண்ணியவாறே, நான் பாட்டுக்கு, அவனைத் கண்டு கொள்ளாமல் போயிரலாம் என்று பாட்டில் கவனத்தை செலுத்தியவாரே வீடு போய் சேர்ந்தேன்.
அடுத்த நாள் மாலை. அதே இடத்தில், அதே எடை பார்க்கும் கருவி, அதே ஆள். பாவமாக உக்காந்திருந்தான். எவரும் வரவில்லையோ ? நமக்கு எதுக்கு, என்று எனக்கு நானே எண்ணியவாறு வீட்டுக்கு போய் விட்டேன்.
அதற்கு அடுத்த நாள்.
அதற்கும் அடுத்த நாள்.
அதற்கும் அடுத்த நாள்.
என்ன இது வம்பாய், போனதே. அந்த ஆள பாத்து பாவமா இருக்கே. இன்னைக்கு நம்ம ஒரு தடவ எடை பாப்போம். இலவசம் தானே. நான் போவதைப் பார்த்ததும் அந்த ஆளுக்கு ஒரே மகிழ்ச்சி. "வாங்க வாங்க, ஏறி நின்னு, உங்களுக்கு எந்த எடையை அடையணும்னு நெனைக்கிறீங்களோ, அந்த எடைக்கு மாறிடுவீங்க", என்றான்.
இது என்னடா விசித்ரமா, விளம்பரம் பன்றாங்க. என்னமோ, நம்ம எடையை பாத்துட்டு, சீக்கிரமா வீட்டுக்கு போலாம், என்றவாறே எடை இயந்திரத்தின் மீது ஏறி நிற்கிறேன். "ப்ளளளளளளளளளளளளளக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்!"
எங்கடா ரோட்டக் காணோம், அந்த ஆளையும் காணோம். நான் என்ன கரைஞ்சு போய்ட்டேனா ???
Noooooooooo !!!
படீரென விழித்து எழுந்தேன். பக்கத்தில் என் ஆளு சத்தமில்லாம தூங்கிடிருந்தாரு. மணி காலையில் 5. நானும் 2 glass தண்ணியை குடித்து விட்டு, திரும்ப படுத்துக் கொண்டேன்.
அன்று மாலை 'ஆட்டோ' எடுத்துக் கொண்டேன், வீடு வரைக்குமே.
😂
பதிலளிநீக்கு