காதில் தலையணியோடு பாடல்கள் கேட்டுக்கொண்டே, நடப்பது எனக்கு பிடிக்கும். அலுவலகம் முடிந்து திரும்புகையில், ஒரு பூங்கா அருகில் இறங்கி, அங்கிருந்து வீட்டுக்கு நடந்து செல்வதுண்டு. இன்றும் அப்படித்தான்! பாட்டுக் கேட்டுக்கொண்டும் பாடிக்கொண்டும்( வேறு யாரும் கேட்க முடியாதல்லவா, தெருவில் போகும் வண்டி சத்தத்தில்!) போய் கொண்டிருக்கிறேன். ரோடு ஓரம் எதாவது கடை போட்டு வியாபாரம் பண்ணும் மக்கள் இங்கேயும் உண்டு. வெயில் காலம் என்பதால் எலுமிச்சைச் சாறு, பழங்கள், குளிர் பானங்கள் இருக்கும். இன்று எதோ எடை பார்க்கும் இயந்திரத்தை வைத்துக்கொண்டு, இலவசமாக எடை பார்க்கலாம், எடை இறக்க உதவி கிடைக்கும் என்றெல்லாம் போட்டு ஒரு கடை வைத்திருந்தார்கள். எதோ உடற்பயிற்சி நிலையம், விளம்பரத்துக்காக செய்வார்கள் போல. கையேடு ஒன்று வைத்து, எத்தனை பேர் என்று கணக்கெல்லாம் வைத்து கொண்டிருந்தான். நமக்கு இங்க எடை பார்த்தா மட்டும் என்ன, ஏற்றிக் காட்டீரவா போகிறது என்று உள்ளுக்குள் எண்ணியவாறே, நான் பாட்டுக்கு, அவனைத் கண்டு கொள்ளாமல் போயிரலாம் என்று பாட்டில் கவனத்தை செலுத்தியவாரே வீடு போய் சேர்ந்தேன். அடுத்த நாள் மாலை. அதே இடத்த