இடுகைகள்

2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்ந்து முடிப்போம்...

ஒரு குறிப்பிட்ட பிராயம் வரை , இறப்பும் இறுதி சடங்குகளும் பெரிதாய் நம்மை பாதிப்பதில்லை. நம் குடும்பத்தில், சுற்றத்தில் அது நிகழும் வரையிலும் அதன் துன்பம் நாம் அறிவதில்லை. ஆம் ! இது துன்பம் தரும் விஷயம்  தான். வயதாகி, அனைத்தும் அனுபவித்து படக்கெனப் பறந்து போகும் தாத்தா பாட்டியின் பிரிவு ஒரு வகையானது. அதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும். சோகம் ஒரு புறம் இருக்கும் தான் ! வாழ்ந்து முடித்த பூக்களல்லவா அவர்கள். திடீரென எதிர்பார்க்காத நாளில், எதிர்பார்க்காத தொலைபேசி அழைப்பில், எதிர்பார்க்காத இழப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது. இது இறப்பையும் இறுதி சடங்குகளையும் பார்த்து பயப்பட வைப்பது. ஏன் , எதற்கு இது நடந்தது .. அப்படி எப்படி நடக்கலாம். இன்னும் நாட்கள் பல உள்ளனவே பார்த்து களிக்க, என பல பதில் கிடைக்கப்போகாத கேள்விகளை எழுப்புவது இது. நினைக்கும் போதெல்லாம் பதைபதைக்க வைப்பது. இத்தகைய இறப்பு இல்லாமல் இருப்பது மிக நல்லது. எது எப்படியாயினும் வாழ்ந்து முடிப்போம் நாம்.

அழுதல்!

தாங்க முடியாத விடயம் நடந்து விட்டிருந்தது! அழாதே! கூடவே கூடாது! பல சாலிகள் அழுவதில்லை! பரவாயில்லை! சரியாகிவிடும்! கடந்து போய் மற்ற வேலைகள் நடக்கலாயின! யோசனைகள் நினைவுகள் பல வேலை என நாளும் முடிந்தது ! இரவு பத்து மணி ! கொடியில் காயப்போட வேண்டிய ஈரத்துக்கு மாறியது தலையணை ! பல இதயங்களில் இல்லாத அதே ஈரம்? ஹும்! விடிந்தது! ஆம்! சரியாகிவிடும்! எனது பலம் கூடியிருந்தது !