தொலைதல் சுகமாவது எப்போது ?
போரும் காதலும் பெண்டிர் போற்றும் ஆண்களும் ஆண்கள் மதிக்கும் பெண்டிரும் சமயோசிதமும் சன்றான்மையும் வீரமும் சுற்றித் திரியும் வரலாற்று உலகுக்குள் ! அண்டாகாகசம் அபுகாகசமும் மந்திரக்கோல்களும் மறைந்து தோன்றும் மாயாவிகளும் தீயைக் கக்கும் டிராகன்களும் நடக்கும் மரங்களும் பேசும் செடிகளும் மயக்கும் மாய உலகுக்குள் ! h + h + o நீரென மாறியும் மின்னியல் காந்தவியல் தினச் செய்தியாகவும் இருப்பிடம் ஆய்வுக் கூடமெனவும் வேற்று கிரகமும் விந்தை மனிதர்களும் நண்பர்கலெனத் தோன்றும் அறிவியல் உலகுக்குள் ! பட்டாம்பூச்சிகளும் நீயும் மட்டும் இருக்க மகிழ்ச்சி விட்டுப்போகாத என் கனவு உலகத்துக்குள் !! இப்படித் தொலைந்து போகத்தான் எத்தனை உலகங்களை ஸ்ரிஷ்டிக்கிறது மனது !!