இடுகைகள்

ஜூலை, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இதயம் மூளை என்னும் முரண்கள் !!

இதயம் மூளை என்று  இரண்டு இடங்கள்  எதற்கு ?  இறைவனை பார்த்தால்  கேட்க வேண்டும் ! இதயம் மட்டும் இருந்திருந்தாலே  மகிழ்ச்சி நெகிழ்ச்சி அடைய செய்திருக்கலாம்  நம் எல்லாரையும் ! சாப்பிட 2 ரூபா வேண்டும் என  சாலையில் போகும் பாட்டி கேட்டாள்  இதயம் தந்து விடு என்றது  வலக்கை கொடுத்ததை இடக்கையாய் வந்து  தடுத்துச் சென்றது மூளை !!  பளிச்சென பார்ப்பதை பிடிக்க  நல்லதொரு புகைப்படக்கருவி  வாங்கச் சொன்னது என் மனம் !  மேலும் கீழுமாய் நாலும் ஏழும் என  கணக்கு பார்த்து தடை விதித்தது  அம்மாவின் மூளை !!  எதிரில் போவோரை பார்த்து  புன்னகைத்து நாளை நல்லதாக்கச்  சொல்லுது மனம்   !!  சிரிக்காதே பூச்சாண்டி  பிடித்து கொள்ளும்  பயம் காட்டுது மூளை !  போனால் போகட்டும் - மன்னித்து விடும் மனம் !  அன்று அதை இன்று இதை நாளை எதையோ என  போக விடாமல் இழுக்கும் மூளை !  கடவுளை பார்க்கும் போது  கேட்க வேண்டும்  இ...