இடுகைகள்

டிசம்பர், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நிறுத்தத்தில் வந்த மனமாற்றம் !

அப்போதுதான் அவனுக்கு அப்பாடா என்று இருந்தது. தினமும் வீட்டில் ஓடும் மாமியார் மருமகள் சண்டை இன்றோடு முடிந்தது. இவனுக்கு சமதானபடுத்தும் வேலையும் கிடையாது. தனது அம்மாவை இப்போது தான் ஓல்ட் ஏஜ் ஹோமில் விட்டு விட்டு வந்து பேருந்துக்காக காத்திருக்கிறான் . " ஐயா தருமம் பண்ணுங்க ஐயா !", என வயதான பெண்ணொருத்தி இவன் முன்னே கையேந்திய படியே நின்றாள். " எம்மா பாத்தா பெரியவங்களா இருக்கீங்க ! இப்டி பிச்சை எடுக்ரீங்க்லே ! ஒழைச்சு சாப்பிடலாமே ! ", என்று அவன் திட்டி முடித்துருக்கவில்லை, அந்த அம்மாள் அழுத படியே, " நல்ல வாழ்ந்தவ தானையா நானு ! ஒரே பையன் காப்பாத்துவான்னு இருக்க இப்டி அம்போன்னு விட்டுட்டு போயட்டான்யா பெண் ஜாதி பின்னாடி ! " என்று கதறினாள் ! இவன் நெஞ்சுக்குள் முள் தைத்தது போல வலித்தது ! முதியோர் இல்லம் நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான் !

நினைவினில் வந்தது ! :)

கனவுகளின் விளைவுகள் அதிகாலை வந்தது ஒரு கனவு ! படக்கென எழுந்ததை பார்த்து அம்மா கேட்டாள் !! என்ன டி ஆச்சு ?? ஏதோ தீய கனவம்மா ! அலுப்புடன் நான் ! படுத்திருந்த பாட்டி சாங்கியம் சொல்கிறாள் ! காலைல காணுற கனவு பலிக்குமடி ! ஐயோ போங்க பாட்டி ! என்றபடியே திரும்பி படுத்தாலும் அன்றைய நாளை இவ்வெண்ணம் வீணடிக்கும் என்பதை அறியாமலில்லை அடங்காது அலை பாயும் என் மனது!