மழை வேடிக்கை!!
கண்ணாடிக் காட்சிகளை மறைத்து கண்ணாடியை ரசிக்க வைக்கும் முத்துக்கள்! தூரத்து வானம் தூக்கியெறிய தரை விழுந்துமறையும் அழகிய கோலங்கள்! வாடிப் போய்க் கிடக்கும் வெண் அல்லி மலரிடம் காதலோடு பல தீண்டல்கள்! தனக்கஞ்சிப் பலர் மறைத்தெடுத்து விரித்த ஆயுதமாம் குடையிடம் மோதல்கள்! இப்படியாய் வெயில் பேசாத பல கதைகளைக் காட்டிச் சிணுங்கும் வான் மழை!